News | செய்திகள்
இதற்கு மேலயுமா கரி பூசனும்? செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினியை கலாய்த்த பிரபல நடிகர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் அமைந்துள்ள சிவன் மலைக்கு நடிகர் பார்த்திபன் வழிபாடு செய்ய சென்றுள்ளார்.
அப்எப்ங்கொழுது, போனாலும் மூக்கில் நுகர்ந்து கொண்டு சென்று விடும் சில ஊடகங்கள், கோவிலில் வழிபாடு செய்ய போனவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டுள்ளனர்.
எதை கேட்டாலும் பல்லை கடித்துக்கொண்டு பதில் சொல்லி தானே ஆக வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்த நடிகர் பார்த்திபன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவரோ ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார்.
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை.
இருந்தால் இதுகுறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம் என்று சுளீர் பதிலை அளித்துள்ளார்.
கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா? இல்லை பல்பு கிடைத்ததா? என்று தெரியாமல் சற்று நேரம் விழி பிதுங்கி நின்றுள்ளனர் பத்திரிக்கையாளர்கள்.
