fbpx
Connect with us

Cinemapettai

OTT ரிலீஸிலிருந்து பின் வாங்குகிறதா சூரரைப் போற்று? பிரபல நடிகரின் பெரிய படம் தோல்வியால் அதிர்ச்சியில் சூர்யா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

OTT ரிலீஸிலிருந்து பின் வாங்குகிறதா சூரரைப் போற்று? பிரபல நடிகரின் பெரிய படம் தோல்வியால் அதிர்ச்சியில் சூர்யா

கடந்த 5 மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் OTTக்கு சென்ற படங்கள் நிறைய பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சூரரைப்போற்று படம் பின் வாங்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான மிகப்பெரிய படம் ஒன்று தோல்வியை தழுவியது தான்.

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் அவரது 25 வது படமாக வெளியாகி தோல்வியை சந்தித்துள்ள படம் v. தமிழில் உருவான இமைக்காநொடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய தோல்வியை அமேசான் தளத்தில் சந்தித்து இருப்பதால் சூர்யா மிகவும் கவலையில் இருக்கிறாராம்.

அடுத்ததாக அமேசான் தளத்தில் வெளியாக இருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் மிகப்பெரிய படம் என்றால் அது சூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமேசான் தளத்தில் வெளியான எந்த ஒரு படமும் வெற்றிப்படமாக அமையவில்லை என்பது ஒருபக்கம் காரணமாக உள்ளது.

இந்நிலையில் அமேசான் தளத்தில் வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்தை வெளியிடாமல் சூர்யா தடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக செய்ய வேண்டியது ஒப்பந்தத்தை கேன்சல் செய்வது மட்டுமே. அதை சூர்யா செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ரசிகர்கள் அழுத்தம் கொடுப்பார்களா என்பதையும் பார்ப்போம்.

Continue Reading
To Top