புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விடுதலை பார்ட் 3 இருக்கா? இல்லையா? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்.. இளையராஜா ரியாக்சன்?

சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஆனால், வெற்றிமாறனுக்குப் பொருந்துகிறது. அவர், இயக்கிய பொல்லாதவன் படத்தில் இருந்து விடுதலை படம் வரை அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளன.

விடுதலை படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சூரியை ஹீரோவாகவும், விஜய்சேதுபதியை மற்றொரு முக்கிய கேரக்டராகவும் நடிக்க வைத்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்த நிலையில், இப்படத்தின் 2 வது பாகமும் தயாராகி வந்தது.

இந்த நிலையில் விடுதலை படத்தில் பணியாற்றிய அதே டீம் விடுதலை 2 பாகத்திலும் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தில் சூரிக்கு அதிக காட்சிகள் இருந்து அவரை முதன்மைக் கதாப்பாத்திரமாக காண்பித்த வெற்றிமாறன், விடுதலை 2-ல் விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம்ன்கொடுத்து எடுத்துள்ளார். அவருடன் இணைந்து மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் வழி நெடுக காட்டு மல்லி என்ற பாடலை கொடுத்து ரசிகர்களை உருக வைத்த இளையராஜா, விடுதலை 2 ல் தினம் தினம் உன் நினைப்பு பாடலையும் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியாகி வைரலானது.

இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது;

இந்த நிலையில், விடுதலை பட நிகழ்ச்சியின் போது இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது: ’’விடுதலை 1 & 2 படங்களுக்காக மொத்தம் 257 நாள் ஷுட்டிங்கிற்கு ஆனது. இத்தனை நாட்கள் ஷூட்டிங் என்பதை கேட்கும் போதே உங்களுக்குத் தெரியும் எத்தனை சவாலானது என்று.

இதையும் நான் எப்படி முடித்தேன் என்றால், வேறு வழியில்லை, இத்தோடு ஷூட்டிங்கை நிறுத்திக்கிறேன் என்றுதான் கூறினேனே தவிர, ஷுட்டிங்கை முடித்துவிட்டேன் எனக் கூறவில்லை. ஏனென்றால் இப்பட ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. பாக்கியிருக்கிறது என்று கூற அங்கு அமர்ந்திருந்த இளையராஜா சிரித்தார்.

எல்லோருக்கும் வெறும் டைம் மட்டும்தான். ஆனால், புரடியூசருக்கு டைம், பணம், இண்ட்ரெஸ்ட் இதெல்லாமும் சேர்ந்திருக்கு. இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய சேஞ்சஸ் பண்ணிக்கொண்டு கூட இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இன்னும் ஷூட்டிங் உள்ளது, முடியவில்லை என்று கூறியுள்ள நிலையில், விடுதலை பார்ட் 3 உருவாகும் என தெரிகிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிலும் இதே கூட்டணி தான் தொடரும் என்பதால் நிச்சயம் படம் ஹிட்டு இசைஞானியின் இசையில் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என இப்போதே சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விடுதலை பார்ட் 2 டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News