தேவர் மகன் கதை இவருடையதா.? அசால்டாக சுட்ட ஆண்டவர்

Kamal : கமலின் கேரியரில் இன்றளவும் பேசப்படும் படம் தான் தேவர் மகன். சமீபத்தில் மாரி செல்வராஜின் மாமன்னன் படம் வெளியான போது கூட தேவர் மகன் படம் குறித்த சர்ச்சை உருவானது. இதனால் கமல் ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் கதையை கமலே எழுதி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இது வேறு ஒரு பிரபலத்தின் கதை என்றும், அதை கமல் தன்னுடைய படத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது. அதாவது தேவர் மகனுக்கு முந்தைய படமாக கமலின் குணா படம் வெளியானது.

இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில் கங்கை அமரனிடம் கமல் கதை கேட்க சென்றுள்ளார். அப்போதுதான் அதிவீரபாண்டியன் என்று கங்கை அமரன் வைத்திருந்த ஒரு கதையை சொல்லி உள்ளார். இரு பெரிய குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சனையால் கோயில் பூட்டப்படுகிறது.

தேவர் மகன் கதையால் கமலுக்கு ஏற்பட்ட பிரச்சனை

அதன் பிறகு கதாநாயகனால் பூட்டப்பட்ட கோயில் எவ்வாறு மீண்டும் திறக்கப்படுகிறது என்பது தான் கதை இன்று கங்கை அமரன் சொல்லி உள்ளார். அதன் பிறகு கமல் வேறு படங்களில் நடிக்க சென்ற நிலையில் தேவர் மகன் என்ற ஒரு டைட்டில் வைத்து இதே கதையை இளையராஜாவிடம் சொல்லி உள்ளாராம்.

அப்போது இளையராஜாவுக்கு இது தனது தம்பி கங்கை அமரனின் கதை போல் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேரடியாகவே கமலிடம் இது குறித்து கேட்கும் போது நாம் பேசிய கதையை பிறகு படமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கமல் கூறிவிட்டாராம்.

கங்கை அமரனும் வேறு கதையை தான் கமல் எடுக்க உள்ளார் என்று நினைத்துள்ளார். மேலும் தேவர் மகன் படத்தை பரதனை வைத்து இயக்கி கமல் வெற்றி கண்டார். படம் வெளியான பிறகு தன்னுடைய கதை என்று தெரிந்த பின் கமலுடன் கங்கை அமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் சில காலம் இருவரும் பேசிக் கொள்ளாமலும் இருந்துள்ளனர்.

உலகம் சுற்றும் ஆண்டவர்

- Advertisement -spot_img

Trending News