ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் தன்னுடைய 164வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாக ரஜினியே கூறியிருந்தார்.

சமீபத்தில் இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்க போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இவருக்கும், இந்தி பட இயக்குனர் அனுராக் கஷ்யப்புக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் பேசப்பட்டது.

பின்னர் நடிகர் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சில மாதங்களாக பேசப்படுகிறது. இதை மறுத்துள்ள ஹீமோ, சொஹைலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவர் எனக்கு சகோதரர் போன்றவர் என்றார்.

இதுகுறித்து, சொஹைல் எனக்கும் ஹீமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஏதாவது இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தற்போது இவரின் இந்த கிசுகிசு பாலிவுட்டில் பெரிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது.