பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகை டல்ஜிட் கவுர். இவர் ஷலீன் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2015ல் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் டல்ஜிட் கவுர் ஒரு பேட்டியில், சில மாதங்களுக்கு முன் நான் விவாகரத்து பெற்று இப்போது என் மகன் ஜயிடனுடன் தனியாக தான் இருக்கிறேன். என் மகனுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் எனக்கு ஒன்றும் அவசரம் இல்லை. அதே சமயம் வேண்டாம் என்று சொல்லவும் காரணம் இல்லை. வருங்காலத்தில் நடக்கலாம், நானும் சிறந்த மனிதருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.