Sports | விளையாட்டு
இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடக்க போவது இந்த நாட்டில்தான்.. ஒரு ஐடியா போட்ட BCCI
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களும் அதிகம் விரும்பிப் பார்க்கும் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தான். பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஒன்றிணைந்து விளையாடுவதை முதன்முதலில் இந்தியாதான் அறிமுகப்படுத்தியது.
தற்போது பல நாடுகளில் நடந்தாலும் விதை இந்தியா போட்டது. 12 ஆண்டுகள் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் தற்போது 13 வது ஆண்டை எட்டியுள்ளது. ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக சர்வதேச அளவில் கொரானா வைரஸ் தாக்கத்தினால் எங்கேயுமே கிரிக்கெட் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலும் ஐபிஎல் போட்டி இந்தாண்டு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதைப் போலவே தற்போது வரை பேச்சுக்கள் இருந்து வருகின்றனர். இடையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிகளை தங்களுடைய நாடுகளில் நடத்தலாம் எனவும் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால் அதே சமயத்தில் ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி தருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி இப்போதைக்கு ஐபிஎல் பற்றிய எந்த எண்ணமும் இல்லை என இரு நாடுகளுக்கும் பதிலளித்துள்ளது பிசிசிஐ.
அப்படியே நடத்த ஆசைப்பட்டாலும் சர்வதேச அளவில் போக்குவரத்துகள் இன்னும் தொடங்காத நிலையில் பெரும் சிக்கல்தான் ஏற்படும் என்பதால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடக்க 99 சதவீதம் வாய்ப்பில்லை என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.
அப்படி நடத்தினால் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடக்கும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது. ஏனென்றால் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது ஐக்கிய அரபு நாட்டில் தான் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
