கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தனியார் பாலை பற்றிய குற்றசாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

 
பிணங்களை பாதுகாக்கும் ரசாயணமா?

 

இந்நிலையில் பிணங்களை பதப்படுத்த பயன்படும் ஃபார்மால்டிஹைடு என்ற ரசாயனத்தை சில தனியார் நிறுவனங்கள் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த ரசாயனம் பால் கெடாமல் இருப்பதற்காக கலக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த பாலை பருகுவதால் புற்றுநோய், அல்சர், மாரடைப்பு போன்றவை ஏற்படும் எனவும் அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.