ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய்69 படத்தில் விஜய் கேரக்டர் இதுதான்.. இதென்ன பழைய குருடி கதவை திறடி மாதிரி இருக்கு

விஜயின் தி கோட் படம் சமீபத்தில் வெளியான நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், தனது கடைசி படமான விஜய்69 படத்திலும் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் விஜய் 69 படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கடைசிப் படம்

விஜயின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் விஜய்69. இப்படத்தை தீரன், வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, நரேன், பிரகாஷ் ராஜ், அனிமல் பட புகழ் பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, சென்னையில் உள்ள முக்கிய இடத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங் நடத்தப்பட்டது. அனிருத் இசையில் பாடல்கள் சூப்பராக வந்திருப்பாகவும், தனது கடைசி படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. இப்படம் சமூக அக்கறை மற்றும் அரசியல் உள்ளடக்கிய படமாக இருப்பதால் இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதாக தகவல் வெளியானது.

விஜய் 69 படத்தில் விஜய்யின் வேடம் என்ன?

விஜய் 69 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் இனி போக போக ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்களுக்கு வெளியிடும் என தெரிகிறது. இந்த நிலையில், விஜய் இப்படத்தில் அரசியல் வாதியாக நடிக்கிறார். சமூக அக்கறை கொண்டபடமாக உருவாகவுள்ளது எனக் கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதி அல்லது கேங்ஸ்டாக இருக்கும் வில்லன் பாபி தியோலை எதிர்த்து தீரமுள்ள போலீஸ் அதிகாரியாக விஜய் மிடுக்க கெட்டப்பில் வருவது போல் தகவல் வெளியாகிறது.

விஜய் இதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக போக்கிரி, தெறி போன்ற படங்களிலும், துப்பாக்கி, வில்லு உள்ளிட்ட படங்களில் ராணுவ வீரராகவும், தி கோட் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து மாஸ் காட்டியிருப்பார். விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக் குவித்தனர். அந்த வரிசையில், விஜய் 69 படத்திலும் விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் எந்த கெட்டப்பில் நடித்தாலும் அவர் திரையில் வந்தாலே போதும் என்று கொண்டாடிட ரசிகர்கள் இருப்பினும், விஜய் தான் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் அதற்கேற்ப ஃபிட்டாகவும் இருப்பது ரசிகர்களை இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இப்படத்திலும் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்பது, அவரது இமேஜை இன்னும் பல மடங்கு உயர்த்தும் அளவு விஜய்யின் கேரக்டரிலும், திரைக்கதையிலும் ஹெச்.வினோத் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

விஜயின் கடைசிப் படத்தில் போலீஸ் அதிகாரி என்பதால் நிச்சயம் இப்படத்திலும் அதிரடி சண்டை காட்சிகளுக்கு குறையிருக்காது. இது பக்கா கமர்சியல் படம் என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிடும் என தெரிகிறது.

- Advertisement -

Trending News