Videos | வீடியோக்கள்
நேரலையில் வசமாக சிக்கி மழுப்பிய பாண்டே.. வச்சி செய்த ஆவுடையப்பன் வீடியோ
ஒரு காலத்தில் தந்தி டிவி பாண்டே அரசியல் கட்சிகளை எதிர்த்து மக்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பரவச் செய்தார். விவாத நிகழ்ச்சியில் ஒருவருக்கு எளிதான வேலை எதுவென்றால்; ஒன்று கேள்வி கேட்பது மற்றொன்று, வார்த்தையில் ஏதேனும் சிக்குவது போல இருந்தால் நடுநிலை என்று கூறி இரண்டு பக்கமும் பேசி சமாளிப்பது. பாண்டே இதனைதான் இத்தனை காலம் செய்து வந்தார். ஆனால் தற்பொழுது பிஜேபி என்று ஒரு நிலையில் போகும்போது வசமாக மாட்டி வருகிறார்.
அரசியல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தன்னுடைய தொலைக்காட்சியை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளை கிழித்து வந்தார். குறிப்பாக திராவிட கட்சிகளை தாக்குவது தான் இவரின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக பாண்டே பிஜேபிக்கு அதிக சப்போர்ட் செய்வதாக செய்திகள் பரவியது. அதுமட்டுமல்லாமல் தான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் பிஜேபியை உயர்வாகவும் அவர்கள் செய்வதை சரியாகவும் நிலைநிறுத்தி பேசுவதையே வேலையாக செய்தார்.
மத்திய அரசு தமிழகத்துக்கு எப்போதுமே நிதி விஷயத்தில் ஓர வஞ்சனை செய்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு பல்வேறு வகையான இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டபோது கூட நம்முடைய அரசியல்வாதிகள் கேட்கும் தொகையை ஒன்று, அவர்கள் கொடுக்கும் தொகை ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.
தற்போது வரை தமிழக அரசு கேட்கும் நிதி தொகையை சரியாக வழங்கவில்லை. தற்போது கொரானா பாதிப்பிலிருந்து மீண்டுவர தமிழக அரசு 9,000 கோடி கேட்ட நிலையில் வெறுமை 510 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது மத்திய அரசு.
இது சரியா என நேரலையில் நெறியாளர் ஆவுடையப்பன் பாண்டே விடம் கேட்டதற்கு, அதை மறுக்கும் வகையில் எது ஏதோ பதிலளித்தது அவர் தொடர்ந்து பிஜேபி கட்சிக்கு ஆதரவு தருகிறாரா எனவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஒவ்வொரு விஷயத்திலும் பாண்டே பிஜேபியை முன்னிறுத்தி அவர்களை உயர்வாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
நெறியாளர் ஆவுடையப்பன் ஒரு கேள்வி கேட்டால் பாண்டே வேற எது ஏதோ புரியாமல் பேசி சமாளிப்பது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக அந்த வீடியோவின் கமெண்ட்கலை படிக்கவும்.
