Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய்.. இந்த சம்பளம் தமிழ் சினிமாவுக்கு நல்லதா?
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு வசூல் மன்னன் யார் என்றால் தளபதி விஜய் தான் என்பதை பல தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து பல பேட்டிகளில் கூறி வருகின்றனர். மெர்சல், சர்கார் படங்களில் தொடர்ந்து 250 கோடி, பிகில் படத்தின் மூலம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் 80 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி 65 படத்திற்காக கிட்டத்தட்ட 100 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதையும் அந்த நிறுவனம் கொடுக்க தயாராக இருக்கிறது.
அதற்கு காரணம் சமீப காலமாக விஜய்யின் படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல முறையில் வியாபாரமாகி வருவது தான். மற்ற சினிமாக்களில் உள்ள பெரிய நடிகர்கள் சம்பளம் வாங்குவதைவிட தங்களது படம் வசூல் செய்யும் வசூலில் குறிப்பிட்ட அளவு பங்கு கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.
அந்த முறையை விஜய் கடை பிடிக்கலாம் என மூத்த தயாரிப்பாளர்கள் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். அப்படி செய்தால் ஒருவேளை படம் நன்றாக செல்லவில்லை என்றாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற சினிமாக்களில் உள்ள முன்னணி நடிகர்களே தங்களது படங்களை தயாரித்து தாங்களே வியாபாரம் செய்து கொள்வதால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஆனால் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணியில் இருக்கும் நடிகர்கள், சம்பளம் வாங்குவதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார்கள். தன்னுடைய படங்களை சொந்த தயாரிப்பில் தயாரிக்க யாரும் முன்வருவதில்லை.
ஆனால் மற்ற சினிமாக்களை விட தமிழ் சினிமா நடிகர்கள் கொஞ்சம் புத்திசாலிதான். பங்கு கேட்டால் படத்திற்கு படம் சம்பள விகிதம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டுக்கு ஏற்றபடி சம்பளம் வாங்கிக்கொள்ளலாம் என்பதால் இந்த முறையை கடைபிடிக்கின்றனர்.
விஜய் தனது அடுத்த படத்திற்கு இன்னும் 30 கோடி சம்பளத்தை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது தமிழ் சினிமா.
