fbpx
Connect with us

Cinemapettai

பூஜையும் இல்ல ஷூட்டிங்கும் இல்ல.. சூர்யாவை சோதிக்கும் இயக்குனர்

suriya-sad

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பூஜையும் இல்ல ஷூட்டிங்கும் இல்ல.. சூர்யாவை சோதிக்கும் இயக்குனர்

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஏப்ரல் மாத வெளியீடுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. சூர்யா, அபர்ணா முரளி, கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தை இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவர வேண்டிய சூரரைப்போற்று படம் கிராபிக்ஸ் பணிகளின் காரணமாக பட வெளியீடு தள்ளிப் போனது. தற்போது இறுதியாக ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக வர இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகாததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா ஹரி படத்தில் நடிக்க உள்ளார் என வதந்திகள் வெளியானது. அதை நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஒரு பிரஸ்மீட்டில் கூட அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை அதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை.

பட பூஜை நடக்காத நிலையில் சூர்யா ஹரி படம் நடக்குமா என்ற என்ற சந்தேகத்தை கோலிவுட் வட்டாரங்களில் கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் என்ற படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சூர்யா வெற்றிமாறன் படத்திற்கு பிறகு ஹரி படத்தில் நடிக்கலாம் என யோசிக்கிறாரா? என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏப்பா ரசிகர்களே, நீங்களே ஒரு நல்ல சஜஷன் கொடுங்க பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top