Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-myskkin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனசாட்சி இல்லாமல் சிம்பு பண்ணிய வேலை.. உன் சாவகாசமே வேணா கெளம்பு என கழட்டிவிட்ட மிஸ்கின்

ஏற்கனவே விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் மிஸ்கின் அடுத்து தரமான படமாக கொடுத்து விட வேண்டுமென மெனக்கெட்டு தனது முந்தைய வெற்றிப் படமான அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தை தயார் செய்து வைத்துள்ளாராம்.

சில மாதங்களுக்கு முன்பு மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. அது முற்றிலும் உண்மை தான். ஆனால் வழக்கம்போல் சிம்பு தனது வாயால் அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டாராம்.

சிம்புவுக்கு சுத்தமாக மார்க்கெட்டே இல்லாத நிலையில் அஞ்சாதே 2 படத்தில் நடிக்க ரூ 10 கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சிம்புவை கழட்டி விட்டு மற்றொரு ஹீரோவிடம் மிஸ்கின் சென்றுவிட்டார் என்ற செய்திகள் கூடவே ஒட்டிக் கொண்டு வந்தது.

ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் கண்டிப்பாக சிம்புவுடன் படம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மிஸ்கின் அருண் விஜய் கூட்டணியில் அஞ்சாதே 2 படம் உருவாக உள்ளது.

ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப் பட்ட உடன் உடனடியாக ஒரே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் அடுத்த இரண்டு மாதத்தில் படத்தை வெளியிடும் முயற்சியிலும் இறங்கியுள்ளாராம் மிஸ்கின்.

Continue Reading
To Top