Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

53 வயது இயக்குனருடன் ரகசிய உறவில் இருந்தாரா சமந்தா? ஒரு படம்தான சேர்ந்து பண்ணுனாங்க!

சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தமிழிலும் அவ்வப்போது விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமந்தா நடிகையாக இருந்தாலும் பல காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். அதில் முக்கியமான ஒன்று தான் சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தது. இதுபற்றி அனைத்து மொழிப்பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் 53 வயதான இயக்குனர் லிங்குசாமியுடனும் சமந்தா கிசுகிசுக்கப்பட்டார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு சினிமா என்றால் ஆயிரத்தெட்டு சர்ச்சைகள் வரத்தான் செய்யும். இவ்வளவு ஏன் சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவுக்கு கூட அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கள் வரும். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டது வேண்டுமானால் உண்மை என எடுத்துக் கூறி சமந்தாவின் இயக்குனர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பயில்வான்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கிசுகிசு மன்னனாக வலம் வரும் பயில்வானே இதற்கு விளக்கம் கொடுத்துள்ளதால் நம்பித்தானே ஆக வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். சமந்தா மற்றும் லிங்குசாமி இருவரும் சூர்யாவின் அஞ்சான் படத்தில் இணைந்து வேலை செய்தனர்.

அதோடு சரி, அதன்பிறகு லிங்குசாமிக்கே படவாய்ப்புகள் இல்லை, இதில் சமந்தாவுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பார். பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா! என சமந்தாவே இந்த செய்தியைக் கேள்விப்பட்டால் சிரிப்பார்.

samantha-lingusamy-cinemapettai

samantha-lingusamy-cinemapettai

Continue Reading
To Top