Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய விஷயம் எப்பொழுது தான் முத்துக்கு தெரிய வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் தற்போது நெருங்கி விட்டது. அந்த வகையில் மீனா, அவருடைய தோழிகளிடம் என்னுடைய கணவர் என் மீது கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தி விட்டார். அவர் செய்தது தவறு என்று புரிந்து கொண்டார் என்பதை சந்தோசமாக சொல்கிறார்.
அந்த நேரத்தில் சீதா, மீனாவுக்கு போன் பண்ணி ஹாஸ்பிடலுக்கு உடனடியாக பூ கொண்டுட்டு வா என்று சொல்கிறார். உடனே மீனா, பூ எடுத்துட்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார். அப்பொழுது தினமும் இந்த மாதிரி நீ பூ கொண்டுட்டு வர வேண்டும் என்று சொல்லிய நிலையில் இனி நான் பார்க்கும் வேலை அதன் மூலம் கிடைக்கும் சம்பளமே போதும் நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்.
ரோகிணி ஆட்டம் அடங்கும் நேரம் வந்தாச்சு
இனிமேல் உன்னுடைய சந்தோசம் குடும்பத்தை பார்த்து நிம்மதியாக வாழு அக்கா என்று சென்டிமெண்டாக பேசி சீதா பாசத்தை காட்டுகிறார். அப்பொழுது அங்கே வந்த ரோகினி பதட்டமாகவே டாக்டர் ரூமுக்கு போகிறார். இதை பார்த்த மீனாவும் சீதாவும் எதற்கு ரோகிணி ஹாஸ்பிடல் வந்திருக்கிறார் என்று குழப்பம் அடைகிறார்கள். உடனே மீனா எதுவாக இருந்தால் எனக்கு என ஏற்கனவே இப்படித்தான் ஒரு முறை குழந்தை விஷமாக வந்திருப்பார்கள் என்று அவசரப்பட்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி திட்டு வாங்கி விட்டேன்.
வழக்கம்போல் ஏதாவது செக்கப் ஆக இருக்கும் என்று சொல்லி மீனா கிளம்ப ஆரம்பித்து விட்டார். ஆனால் சீதா, மீனாவை விடாமல் இரு அக்கா நான் எதற்கும் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று ரிசப்ஷன் போய் கேட்கிறார். ஹாஸ்பிடலில் சீதா வேலை பார்க்கிற ஒருவர்தான் என்று எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார்கள். அதாவது ஏற்கனவே இவருக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.
இப்பொழுது நீண்ட இடைவேளை ஆனதால் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதில் ஏதாவது பிரச்சினை வருமா என்பதை விசாரிப்பதற்காக வந்திருக்கிறார் என்று நடந்த விஷயத்தை சீதாவிடம் சொல்கிறார்கள். இதை கேட்டதும் சீதா குழப்பத்திலேயே மீனாவிடம் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். உடனே மீனா, என்னது ரோகினிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இருக்கிறதா என்று அதிர்ச்சி அடைகிறார்.
அத்துடன் மீனா, சீதாவிடம் இனி இதைப் பற்றி யாரிடமும் கேட்க வேண்டாம் சொல்லவும் கூடாது என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். ஆனால் போகும் போது இந்த ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டே குழப்பத்திலேயே போகிறார். அப்பொழுது வீட்டு வாசலில் ஒரு பிரசவ சவாரி அவசரமாக போக வேண்டும் என்று முத்து போன் பேசிக்கொண்டு காரில் ஏறுகிறார்.
இதைக் கேட்டதும் மீனா, முதல் குழந்தை அப்புறம் எப்பொழுது பிறந்திருக்கும் என்று முத்துவை கேள்வி கேட்கிறார். முத்துவுக்கு எதுவும் புரியாததால் ஏதாவது உலராத வீட்டுக்கு போ நான் அவசரமாக ஒரு சவாரி போக வேண்டும் என்று சொல்லி கிளம்புகிறார். வீட்டுக்குள் போன மீனா, அந்த விஷயத்தையே நினைத்து விஜயா சொல்வதை காதில் வாங்காமல் ரோகிணி பற்றியே நினைக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகினி மற்றும் மனோஜ் ஸ்வீட் கொண்டுட்டு வந்து சந்தோசமாக விஜயாவிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். உடனே விஜயா ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்படுகிறார். ஆனால் மனோஜ், நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரு விஷயமும் இல்ல. பிசினஸில் இன்னைக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது அதனால் தான் இந்த ஸ்வீட் சந்தோசம் என்று சொல்கிறார்.
அப்பொழுது வீட்டிற்கு வந்த முத்து, ஒரு பிரசவத்தை நேரில் பார்த்த சந்தோஷத்தையும் அந்த குழந்தையை கையில் வாங்கின உணர்வையும் பற்றி விளக்குகிறார். இதை சொல்ல சொல்ல ரோகிணி முகம் அப்படியே மாறுகிறது. இதை மீனா நோட் பண்ணி ரோகினிக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிற விஷயத்தை உறுதிப்படுத்துகிறார். ஆனால் இப்பொழுது யாரிடமும் சொல்ல வேண்டாம்.
என்ன விஷயங்கள் என்பதை நன்றாக விசாரிக்க வேண்டும் என்று சீதாவிடம் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார். ஆனால் இந்த விஷயம் முத்துவிற்கு தெரிந்தால் மட்டும் தான் இன்னும் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும். அத்துடன் ரோகிணியின் ஆட்டமும் அடங்கும் என்பதற்கு ஏற்ப தற்போது நாடகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
- திருந்தாத மீனாவிற்கு ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து கொடுத்த பதவி
- மதுக்கு அடிமையாகிய முத்துவை பார்த்து சந்தோஷப்படும் விஜயா
- விஜயா சொன்னதை கேட்டு மீனாவிடம் பிரச்சனை பண்ணும் முத்து