Connect with us
Cinemapettai

Cinemapettai

annaththa-villain

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைவிடப்படுகிறது அண்ணாத்த? ரஜினியின் செயலால் அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்

தர்பார் படத்திற்கு பிறகு தலைவர் ரசிகர்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது அண்ணாத்த படத்தை தான். நார்த் மெட்ராஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது படப்பிடிப்புகள் பாதி சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரஜினி மட்டுமின்றி மொத்த படக்குழுவும் அப்செட்டில் தான் உள்ளனர். அதிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் சோதனையை சந்தித்துள்ளது. ஏற்கனவே அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக பலவிதமாக செய்திகள் வெளிவந்தன.

அதற்கு தகுந்தாற்போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதைக்கு அண்ணாத்த படப்பிடிப்பிற்கு வர முடியாது என்பதை தெளிவாக சொல்லி விட்டாராம். கொரானாவுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் படத்தில் நடிக்க வர மாட்டேன் என தெரிவித்து விட்டாராம்.

மேலும் அண்ணாத்த படத்திற்காக கொடுத்த சம்பளத்தை வேண்டுமானால் திருப்பி கொடுத்து விடுகிறேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளதாக டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் பணத்தை வாங்கவில்லையாம்.

மேற்கொண்டு ரஜினி எப்போது படப்பிடிப்புக்கு வந்தாலும் அப்போதே தொடங்கிக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டார்களாம். அடுத்ததாக தளபதி65 படத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெருமளவு சோகத்தில் உள்ளனர்.

Continue Reading
To Top