Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா பழைய காதலை புதுப்பிக்க தூது சென்ற இயக்குனர்..! ஒத்த சொல்லால அவரின் முதலுக்கு மோசமானது..!
`பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தில் தனுஷை இயக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில், தனுஷ்-க்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் நடனபுயல் பிரபுதேவாவிடம் ஒரு கதையை சொல்ல அவருக்கு கதைபிடித்து போக, அந்த படத்தில் நடிக்க பிரபுதேவா உடனடியாக கால்ஷீட் வழங்கினார். என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்…
அந்த படத்தில் கன்னட நடிகை நடிப்பதாக இருந்தது. அவரை நீக்கி விட்டு நயன்தாராவை நடிக்க வைக்க சுப்புராஜ் முயற்சி செய்தார். ஆனால் நடிகை நயன்தாரா கடுப்பாகி என்னால் அவரோடு இணைந்து நடிக்க முடியாது. அவரால் நான் இழந்தது அதிகம். அதனை வார்த்தையால் கூற முடியாது. வேண்டுமானால் வேற ஹீரோ இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என கூறி நடையை கட்டியுள்ளார் அம்மணி.
இதன் மூலம் இயக்குனர் சுப்புராஜுன் பிரிந்த ஜோடிகளை மீண்டும் இணைக்கும் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் `தேவி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்நிலையில், ‘யங் மங் சங்’, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஷால் – கார்த்தி இணைந்து நடிக்க உள்ள `கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தையும் இயக்குகிறார்.
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார். இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் அதற்காக நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.
இதற்கு முன்னதாக பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா `வில்லு’ படத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
