Connect with us
Cinemapettai

Cinemapettai

கமல் ஓகே சொல்லும்போது மணிரத்னம் மட்டும் என்ன விதிவிலக்கா.. எல்லாம் ஒரே குட்டைல ஊருன மட்டைதான!

manitratnam-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் ஓகே சொல்லும்போது மணிரத்னம் மட்டும் என்ன விதிவிலக்கா.. எல்லாம் ஒரே குட்டைல ஊருன மட்டைதான!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குனர் என்றால் அது மணிரத்தினம்(Mani Ratnam) தான். அன்று முதல் இன்று வரை இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படம் இந்த காலத்துக்கும் நான் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல என்பதை போல சூப்பர் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் அனைவரையும் வைத்து பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் இடையில் ஒரு காதல் திரைப்படத்தை இயக்கி விடலாம் என முடிவு செய்து விட்டார்.

இந்நிலையில் பெரிய பிரச்சினையாக கிளம்பி இருப்பது தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தான். அதேபோல் இந்த இரண்டு மாத இடைப்பட்ட காலங்களில் OTT தளங்களின் வளர்ச்சி தமிழ் ரசிகர்களிடையே அதிகமாகிவிட்டது.

இதனால் மணிரத்தினம் உடனடியாக பெரிய நடிகர்கள் அனைவரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கு சிரமம் வைக்காமல் இருந்தால் மட்டுமே படமெடுத்து தியேட்டரில் வெளியிடுவார்கள் என கூறியுள்ளார்.

இல்லையென்றால் மக்கள் தற்போது வீட்டிலிருந்தே படம் பார்க்கும் மனநிலையில் இருப்பதைப் போல இனி OTT தளத்திலேயே அனைத்தையும் வெளியிட வேண்டிய நேரம் வந்து விடும். பின்னர் காலத்திற்கு ஏற்றார்போல் நம்மளும் மாறி கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே தியேட்டர்காரர்களுக்கு யாரும் சப்போர்ட் செய்யாத நிலையில் மணிரத்னமும் அவர்களை கைவிட்டது தியேட்டர் ஓனர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top