தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜீன் மாதம் 29ம் திகதி தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பா.பாண்டி படத்தின் டைட்டில் கார்டில் செல்வி திவ்யதர்ஷினி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுகுறித்து டிடி-யிடம் கேட்டால், வேண்டாம் ப்ளீஸ் என கறாராக மறுத்துவிட்டாராம்.