இயக்குனர் ராம் தற்போது இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் தரமணி. ஐ.டி. துறையில் இருப்பவர்களின் காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படத்திற்கு A சான்றிதழ் தற்போது தணிக்கையால் வழங்கப்பட்டது.Baahubali

இதனை எதிர்த்து இயக்குனர் ராம் சென்சார் செய்த வசனங்களை நீக்காமல் டீசரை யூடியூபில் வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.

அதுகுறித்து ராமிடம் கேட்டபோது

“இந்த படத்தில் 14 இடங்களை தணிக்கை கட் செய்துள்ளார்கள் எனக்கு அதில் உடன்பாடில்லை. அதில் பெண்கள் குடிப்பதுபோன்ற காட்சி வருகிறதாம், கிராமத்தில் மது குடிக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன், வயதான பாட்டிகள் பல இடங்களில் மது அருந்துகிறார்கள், மது அருந்துவது தவறு என்னும் கருத்திற்கு உடன்படுகிறேன், ஆனால் பெண்கள் மதுகுடித்தால் தவறு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதிகம் படித்தவை:  எப்படி இருந்த ஷோபனா ரவி இப்படி ஆயிட்டாங்களே

நான் குழந்தைகளுக்காக இந்த படம் எடுக்கவில்லை, வயது வந்தோருக்காக எடுக்கிறேன் எனவே A சான்றிதழ் கிடைத்ததில் வருத்தமில்லை, என்ன தயாரிப்பாளர் என்னால் வரிச்சலுகையை இழந்துவிட்டார், அவரிடம் நான் பேசி சமாளித்தேன்.

இந்த படம் ஒரு நல்ல கதை அம்சம் உள்ள படம், பாகுபலிக்கு மட்டும் U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை என்படத்திற்கு ஏன் அதை வழங்க யோசிக்க வேண்டும், பாகுபலியில் இல்லாத வன்முறையா குரோதமா? அது என்ன பாகுபலிக்கு மட்டும் தணிக்கையின் பரிவு? இதில் பெரும் அரசியல் உள்ளது.

அதிகம் படித்தவை:  செல்போனில் பேசத் தொடங்கும் முன் ஹலோ ஏன் சொல்கிறோம் தெரியுமா?

A என்றால் பயந்து படத்திற்கு யாரும் வராமல் இருக்க போவதில்லை, எனது படத்தை பார்க்க கட்டாயம் வெகு ஜனங்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இவ்வாறு ராம் கூறினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: A for Andriaதானே?