புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கங்குவா படத்தை வட இந்தியாவில் வெளியிட இத்தனை கோடி செலவா? சூர்யாவை நம்பி அகல கால் வைக்கலாமா?

கங்குவா படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தைப் பற்றி பல தகவல்கள் வெளியாகின்றன. அதேசமயம், இப்படத்தின் பணியாற்றிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகியோர் உழைப்பும் இப்படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

பிரமாண்ட பட்ஜெட்டில் கங்குவா

சூர்யா, பாபிதியோல், திஷா பதானி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ரூ.400 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. தமிழ் சினிமாவுக்கும், இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையில் பார்த்துக் கொண்டாட ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தற்கால நிகழ்வில் ஒரு கேரக்டரிலும் எந்த காலம் என்றே கூற முடியாத ஒரு காலகட்டத்திலும் என சூர்யா 2 கேக்டரிலும் நடித்துள்ள நிலையில் 10 வித கெட்டப்புகளில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் மிரட்டியுள்ளார். மற்ற நடிகர்கள் அனைவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள நிலையில் ஒரே நாளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.2000 கோடி வசூலீட்டும் – தயாரிப்பாளர்

ஏற்கனவே இப்படத்தின் டீசர், டிரெயிலர், முதல் பாடல் ஆகியவை வெளியான நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, ரஜினியின் வேட்டையன் படத்துடன் மோதாமல் பின்வாங்கியது. இப்படம் வேட்டையன் படத்துடன் மோதியிருந்தால் கலவையான விமர்சனங்களைப் பெற்று 5வது நாளில் ரூ.240 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ள வேட்டையன் படத்துடன் , சூர்யாவின் கங்குவா மோதியிருக்கும் பட்சத்தில், இப்படம் 1000 கோடியைத் தாண்டி ரூ.2000 கோடி வசூலீட்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிவருவதுபோல் நிச்சயம் கங்குவா மரண மாஸ் காட்டியிருக்கும். ஆனால் ஏன் அப்படி தள்ளிப்போனது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குவா படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் வெகுவாகப் பாராட்டியுள்ளது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் நீளம் என்பது குறையாகிவிடக் கூடாது என்று படக்குழு உஷாராகி, மொத்த படத்தின் நீளத்தையும் 2 ½ மணி நேரமாக படக்குழு குறைத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே தி கோட் மற்றும் மெய்யழகன் ஆகிய படங்கள் வெளியாகி நீளம் அதிகமாக இருப்பதாக குறைக்கப்பட்ட நிலையில் கங்குவா அந்த விமர்சனம் எழுவதற்கு முன்பே திட்டமிட்டு நீளம் எடிட்டரால் கட் செய்யப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் வெளியிட இத்தனை கோடி செலவா?

இந்த நிலையில், உலகம் முழுவதும் 38 மொழிகளிலும் வெளியாகவுள்ள கங்குவா படம் வட இந்தியாவில் மட்டும் 3500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எனவே வட இந்தியாவில் இப்படத்தின் புரமோசன் பணிகளுக்காக மட்டும் ரூ.15 கோடி வரையில் செலவு செய்துள்ளதாகவும், வட இந்தியாவில் இப்படத்தை வெளியிட ரூ.7 கோடி என மொத்தம் ரூ.22கோடி செலவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இத்தனை கோடி செலவு செய்து, வட இந்தியாவில் வெளியாகும் இப்படம் நல்ல வசூல் செய்ய வேண்டும் என்பது படக்குழுவினரின் ஆசையாக உள்ளது.

சூர்யாவுக்கு, தமிழகத்தைத் தாண்டி, தெலுங்கானா, ஆந்திரா, கேரளாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இந்தியில் அவர் தயாரிப்பில், அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான சூரரை போற்று இந்தி ரீமேக்காக சர்ஃபிராசரியாகப் போகவில்லை. அதனால் சூர்யா இம்முறை நன்கு யோசித்துத்தான் இம்முடிவை எடுத்திருக்கிறார் என படக்குழு கூறிவருகிறது,. அதற்கு காரணம், சிறுத்தை சிவாவின் இயக்கமும், கதையும், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருந்தால், இதன் காட்சியமைப்பும், 3 டி தொழில் நுட்பமும் பெரிதும் கைகொடுத்தால், நிச்சயம் ரூ.1000 கோடிக்கு மேல் இப்படம் வசூலிக்கும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News