தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் கால் பதிக்க முடியாமல் போராடும் பி ஜே பி  இப்போது தமிழகத்தை சூடேற்றி குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது.

பன்னீர் செல்வம் ஒரு புறம் எடப்பாடி மறுபுறம் என இரண்டு அணிகளாக பிரிந்து சட்டையை பிடித்து கிளைக்காத குறையாய் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது அ தி மு க . ஆனால் இது எல்லாமே மோடியின் மாஸ்டர் ப்ளான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

இதற்கு தகுந்தார் போல் பன்னீர் செல்வமும் எடப்பாடி பஞ்சாயத்தும் நடக்கிறது பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி தரப்பு நிராகரித்திருக்கிறது மேலும் சண்முகநாதன், பாண்டியராஜன் கே பி முனுசாமி பி எச் பாண்டியன் போன்றோருக்கும் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்ததன் மூலம் இனி இரு அணிகளும் ஒன்று சேரப்போவதில்லை என்று தெரிந்து கொண்ட மேலிடம் சூப்பர் நடிகர் மற்றும் உலக நடிகரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது நேரடியாக நான் அரசியலில் ஈடுபட முடியாது மறைமுகமாக வேண்டுமானால் ஆதரவு தருகிறேன் என்று கூற இப்போது சூப்பர் நடிகரின் முடிவுக்காக காத்து கிடக்கிறது.

இந்த முடிவுக்கு பிறகு 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து நாடாளமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்பதே பிஜேபியின் இலக்கு .