வாரிசு 210 கோடி சாத்தியமா? 50 கோடிக்கு மேல் துணிவை வீழ்த்திய விஜய்

அஜித்,விஜய் இருவரும் இந்தியாவின் முக்கியமான முன்னனி நடிகர்கள் என்பதை தாண்டி வசூல் வேட்டையாளர்கள் என்று சொல்வது பொருத்தமானது. ஒவ்வொருவரின் படங்களும் குறைந்தது 200 கோடி வரை வசூலை அள்ளி, தமிழ் சினிமாவை உச்சத்தில் கொண்டு செல்லும். இதனிடையே அண்மையில் பொங்கலை முன்னிட்டு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் கிளப்பி வருகிறது.

2014 ஆம் ஆண்டுக்கு பின் எட்டு வருடங்கள் கழித்து, விஜய், அஜித் இருவரும் மோதிக்கொண்ட இந்த போட்டியில் இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இருந்தாலும் துணிவை காட்டிலும் வாரிசு படத்தின் வசூல் சற்று குறைவாகவே தமிழகத்தில் காணப்படுகிறது. படம் ரிலீசாகி 3 நாட்களில் துணிவு படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடியை எட்டிய நிலையில், வாரிசு 70 கோடி மட்டுமே எட்டியது.

Also Read: வாரிசு 210 கோடி வசூலா? வடிகட்டின பொய்.. கொந்தளித்து விநியோஸ்தர் அளித்த பதிலடி

ஆனால் தற்போது 7 நாட்கள் வசூலை கணக்கிட்டு பார்க்கும்போது, உலகமெங்கும் வாரிசு படம் 210 கோடி வரை வசூலெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வசூல் 200 சதவிகிதம் சாத்தியமில்லாதது என விநியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல திரைப்பட விமர்சகர் ராஜசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வாரிசு படம் 200 கோடி வரை உலகமெங்கும் வசூலாகியுள்ளது என்பது சாத்தியம் என்றும், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கொடுக்கும் அறிக்கையை தான் பின்பற்றி வருவதாக தெரிவித்தார். ஏனென்றால் அஜித்தை காட்டிலும், விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அங்கு துணிவை வீழ்த்தி 6 கோடி வரை வசூலையும், அதே போல தெலுங்கிலும் வாரிசுடு என இப்படம் ரிலீசான நிலையில் கிட்டத்தட்ட 22 கோடி வரை வசூலை எட்டியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் துணிவை நெருங்க கூட முடியாத வாரிசு.. அதுக்குன்னு 30% பின்தங்கி அவலம்

மேலும் ஹிந்தி ரைட்ஸ், ஓவர்சீஸ் உள்ளிட்ட திரையரங்குகளின் வசூலை பார்க்கும் போது, அஜித்தின் துணிவு பட வசூல் தமிழகத்தை தாண்டி பெரிய அளவில் வேறு எங்கும் வசூலாகவில்லை என ராஜசேகர் தெரிவித்தார். இதன் காரணமாக உலகமெங்கும் வாரிசு வசூலை பார்க்கும்போது துணிவு படத்தை விட 50 கோடிக்கு மேல் வாரிசு படம் வசூலில் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் போடும் கணக்கு என்பது சற்றுக்கூட சாத்தியமில்லாமல் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் சில முன்னனி நடிகர்களின் நடிப்பில் தொடர்ந்து படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் தில் ராஜு திட்டம் போட்டு வருகிறார். இதன் காரணமாக இப்படி வாரிசு படத்தின் வசூலை 210 கோடி வரை காட்டினால் தான், அவரால் இங்கு காலூன்ற முடியும் என்பதால் இஷ்டப்படி வாரிசு படத்தின் வசூலை பொய்யாக கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Also Read: நம்பி வந்த பிரபலங்களை வீணடித்த இயக்குனர் வம்சி.. வாரிசு படத்தில் தேவையில்லாத 6 பிரபலங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்