Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த பிரியா பவானி சங்கரா இந்த திவ்யா துரைசாமி? காட்டிய கிளாமரில் படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்
சின்னத்திரையில் இருந்து தற்போது நடிகைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையில் ஜொலிக்க வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோரைச் சொல்லலாம்.
இதிலும் பிரியா பவானி சங்கர் தனி ரூட். செய்தி வாசிப்பாளராக இருந்த சின்னத்திரையில் சீரியல் நாயகியாக வளர்ந்து அங்கேயே தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.
அதனைத் தொடர்ந்து மேயாதமான் எனும் படத்தில் நாயகியாக நடித்த போது ரசிகர்கள் அவரை பெருமளவு கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதன் காரணமாக தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது அதே போல் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் திவ்யா துரைசாமி. ஊரடங்கு சமயத்தில் நாளுக்கு நாள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
முதலில் அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்தார். அதற்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அந்த வகையில் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகியாக புக் செய்யப்பட்டுள்ளாராம். இவரை அதிமுக பொது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அடிக்கடி பார்க்க முடியும்.
பிரியா பவானி சங்கர் தொடர்ந்து அடுத்ததாக திவ்யா துரைசாமிக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
