Connect with us

Cinemapettai

மாபியா தோல்வியால் கார்த்திக் நரேனை அலையவிடும் தனுஷ்.. அண்ணனால் ஏற்பட்ட வினை

dhanush-karthik

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாபியா தோல்வியால் கார்த்திக் நரேனை அலையவிடும் தனுஷ்.. அண்ணனால் ஏற்பட்ட வினை

என்னதான் மாபியா படத்தை அருண் விஜய்யின் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கொண்டாடி தீர்த்தாலும் படத்தின் வசூல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு. படத்தின் கதை நன்றாக இருந்தாலும் ஸ்லோ மோஷன் காட்சிகளை அடுக்கி படத்தின் சுறுசுறுப்பை குறைத்து விட்டார் கார்த்திக் நரேன்.

அரை மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை ரொம்ப நேரம் இழுத்ததால் ஏற்பட்டது இந்த வினை. மாபியா படத்தை இரண்டு பாகமாக எடுப்பதை யோசிக்காமல் ஒரே படமாக எடுத்து இருந்தால் வேற லெவல் வெற்றி பெற்றிருக்கும் என்கிறது சினிமா உலகம்.

மாபியா படம் வெளியாவதற்கு முன்னரே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைப்பாளராகவும் சேர்க்கப்பட்டார்.

ஆனால் தற்போது மாபியா படத்தின் ரிசல்ட்டால் தனுஷ் பின்வாங்குவதாக தெரிகிறது. மேலும் முதலில் ஒன்லைன் மட்டுமே கேட்ட தனுஷ் தற்போது முழு கதையையும் கேட்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காலம் கடத்தி கார்த்திக் நரேனை அலையவிட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஒருவேளை தனுஷ், கார்த்திக் நரேன் படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை செல்வராகவன் படத்திற்கு கொடுத்து இருக்கலாம் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் சோகமே விதியாக என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் நரேன். மாபியா படத்தின் இரண்டாம் பாகத்தை தாறுமாறாக வெளியிட்டு தனுசுக்கு தான் யாரென காட்டப் போவதாக கார்த்திக் நரேன் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top