Connect with us
Cinemapettai

Cinemapettai

jayam-ravi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தில் தனுஷ் நடித்துள்ளாரா? வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படம்

2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் எம் குமரன் S/O மகாலட்சுமி.

தெலுங்கு ரீமேக் ஆக இருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஜெயம் ரவிக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட். படத்தில் பிரகாஷ்ராஜ் வேடமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்த படத்தை கொண்டாடியது என்று சொன்னால் மிகையாகாது. அதற்கு காரணம் அந்தப் படத்தில் அம்மாவாக நடித்த நதியாவின் கதாபாத்திரம் தான்.

இந்த சூப்பர் ஹிட் படத்தில் தனுஷ் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தைப் பார்க்கும்போது வருகிறது.

எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தின் பட பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பூஜைக்கு வந்தாரே தவிர படத்தில் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை என்கிறார்கள் சினிமா வாசிகள்.

m-kumaran-so-mahalakshmi-pooja

m-kumaran-so-mahalakshmi-pooja

Continue Reading
To Top