India | இந்தியா
கொரானா வைரஸால் சிக்கன் சாப்பிடலாமா கூடாதா? டாக்டர் சொல்வது இதுதான்
உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரானா வைரஸ் மெல்ல நிலை இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. வடமாநிலங்களில் கொரானா வைரஸ்கான அறிகுறிகள் அதிகம் தெரிவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் முக்கியமாக சிக்கன் சாப்பிடுவதால் பரவுகிறது என அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. நம்ம ஊரைப் பொருத்தவரை சிக்கன் சில்லி, சிக்கன் குருமா, சிக்கன் கிரேவி போன்ற சிக்கன் சம்பந்தப்பட்ட உணவுகளை ஒரு வேளையாவது ஒருநாளைக்கு சாப்பிடவில்லை என்றால் நிம்மதியே இருக்காது.
ஆனால் அதன் மூலம்தான் கொரானா வைரஸ் பரவுகிறது என்றால் சாப்பிடுவீர்களா? முதியோர்கள் சொன்னதைப்போல நாவடக்கம் நல்லது என்பதை செயல்படுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டோம்.
ஆனால் சிக்கன் முட்டை போன்றவற்றில் இருந்து எந்த வைரஸும் பரவியதாக தற்போது வரை அறிகுறிகள் தெரிய வில்லையாம். மாறாக ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலம் கூட கொரானா பரவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வெயில் காலம் வந்தால் தானாகவே கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்து விடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்போ நம்ம ஊருக்கு கண்டிப்பா கொரானா வைரஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
