புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

TVK தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா புஸ்ஸி ஆனந்த்? விஜய் முன் இருக்கும் சவால்கள்!

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். விக்கிரவாண்டியில் கடந்த அக்டொபர் 27 ஆம் தேதி பிரமாண்ட மாநாட்டையும் நடத்திக்காட்டி, தன் அரசியல் பலத்தையும் மற்ற கட்சிகளுக்கு நிரூபித்துவிட்டார். எனவே சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் விஜய்யின் தமிழகம் வெற்றிக் கழகம் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

விஜய் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து, உன்னிப்பாக செய்துவர, அவரது கட்சிக்களும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னே, மக்கள் இயக்கத்தில் தன் செல்வாக்கை அதிகம் பயன்படுத்தி, மாவட்ட தலைவர்களாக சிலரை புஸ்ஸி நியமித்து வருவதாக முதலில் தகவல் வெளியானது. அதேபோல், யாரையும் விசாரிக்காமல், பதவிகளில் நியமித்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும் இதனால் உண்மையான ரசிகர்கள், பல ஆண்டுகள் விஜயின் தீவிரமான ரசிகர்களும் மனம் உடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

அதன்பின், விஜய் கட்சி ஆரம்பித்த பின்னும், அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, புஸ்ஸி ஆனந்த் தன் அதிகார வட்டத்திற்கு தனக்குத் தெரிந்த, தான் நம்பும் நபர்களை மட்டுமே நிர்வாகிகளுக்கான பட்டியலில் பெயர் சேர்த்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதனால் பல ஆண்டுகள் விஜயின் மக்கள் இயக்கத்திற்கு பணியாற்றி, மக்களுக்கும் சேவை செய்து, தவெகவில் இணைந்து பதவி பெற கனவோடு காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே நாம் தமிழார், பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சிலர் தவெகவுக்கு மாறிவந்தனர்.

தவெக தலைவர் விஜய் முன் இருக்கும் சவால்கள்

ஆனால், தவெகவிலும் இதே கோஷ்டி சண்டை, பதவிக்கு பிரச்சனை இதெல்லாம் நடந்தால் சேர்ந்த தொண்டகள் அக்கட்சியில் இருந்தும் விலக நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். விஜய், சினிமாவிலும் நடித்து, அரசியல் கட்சியையும் பார்த்து, தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

கட்சியை பலப்படுத்தி, 2026 தேர்தலுக்குள் நிர்வாகிகளை தயார் படுத்த வேண்டும் என்பது அவருக்கு முன் இருக்கும் சவால்களாக இருக்கும் நிலையில், கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் அவரது கவனத்திற்கு செல்லவில்லையோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன் அதிகார வட்டத்தை விரிவாக்கி வரும் புஸ்ஸி ஆனந்த், மசெ., களை கட்சி போஸ்ட்டரில் விஜய்க்கு இணையாக தனக்கும் பெரிய புகைப்படம் இருக்க வேண்டும் என நிர்பந்தித்து வருவதாக தகவல் வெளியாகும் நிலையில் அவர் விஜய்யின் தலைவர் பதவிக்கே ஆசைப்படுகிறாரோ? என நெட்டிசன்கள் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News