fbpx
Connect with us

Cinemapettai

ஆர்யா நடிப்பில் உருவாகும் “டெடி” இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா ? போஸ்டர் பகிர்ந்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யா நடிப்பில் உருவாகும் “டெடி” இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா ? போஸ்டர் பகிர்ந்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், தொடர்ந்து ஆர்யாவை வைத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படம் டெடி.

சக்தி சௌந்தர்ராஜன் இன்றைய தேதியில் கோலிவுட்டில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர். எடுத்தது என்னவோ நான்கு படங்கள் தான். ஆனால் அதில் அவர் காட்டிய வித்யாசங்கள், மற்றும் அதான் ஜானர்கள் காரணமாகவே இவரை இன்று டாப் இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்துள்ளது.

டெடி

ஆர்யா நடிக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இப்படத்தை அவரின் மகள் ஆதனாவும் இணைந்து தயாரிப்பதாக முதல் லுக் போஸ்டரில் வெளியிட்டிருந்தனர். டி இமான் இசை அமைக்கிறார் என்ற தகவலுடன் நேற்று டைட்டில் போஸ்டர் வெளியானது.

teddy

நேற்று வெளியானதை முழுவதுமாக முதல் லுக் போஸ்டர் என்று கூட சொல்ல இயலாது, எனினும் நம் நெட்டிசன்கள் இப்படம் காப்பி தான், தழுவல் தான் என்று பேச ஆரம்பித்தனர். “டெட்” {ted } என்ற ஆங்கில படம் தான் எனவும் போஸ்டர்ஸ் ஷேர் செய்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.

TED

மார்க் வால்பெர்க் நடிப்பில் 2012 , 2015 என இரண்டு பாகங்கள் வெளியாகி உள்ளது. பாண்டஸி கலந்த காமெடி ஜானர் படம் இது. அவனின் சிறுவயது ஆசை காரணமாக அவனின் கரடி பொம்மைக்கு உயிர் வந்து விடுகிறது.

the ted

இருவரும் அடிக்கும் லூட்டி, ஹீரோ காதல் வயப்பட்ட அந்த ஜோடியை சேரவிடாமல் டெட் செய்யும் சேட்டை என ஒரு ஜாலி ராய்ட் தான் இப்படம்.

 

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

டைட்டில், சிறிய போஸ்டர் வைத்து முழு கதையையும் சொல்லும் திறன் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே உள்ள தனி திறமை தான்.

தன் மகளையும் இணை தயாரிப்பாளர் ஆகியுள்ளார் எனில் இதுபோன்ற பாண்டஸி ஜானரில் பொண்டு பொடுசுகளை டார்கெட் செய்யவே வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதில் துளியும் ஐயமில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top