இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2.. ஹீரோ யார், தலைப்பு என்ன தெரியுமா

சந்தோஷ் பி ஜெயக்குமார் –  ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் படங்களை இயக்கியுள்ளார். அடல்ட் காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட முதல் இரண்டு படங்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது; ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.

கஜினிகாந்த் பக்கா பிளாப் ஆனது. எனினும் மனிதர் அரவிந்த் சாமி நடிப்பில் ‘புலனாய்வு’ என்ற படத்தை ஆரம்பித்தார். அப்படம் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் ரெடியாகிறது.

முற்றிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர். நம் இயக்குனர் அவர்களே ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.

IAMK 2 – SANTHOSH P JAYAKUMAR

முதல் கட்ட ஷூட்டிங் சென்னை, இரண்டாவது பாங்காக்கில் நடக்கவுள்ளதாம். இப்படத்தின் தலைப்பு “இரண்டாவது குத்து” என்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.

 

Leave a Comment