Reviews | விமர்சனங்கள்
“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரை விமர்சனம்.!
கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியிருக்கார், இதற்குமுன் இவர் இயக்கிய திரைப்படம் தான் ஹர ஹர மகாதேவி. இப்பொழுது வரும் படங்களில் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடிகள் வர தொடங்கிவிட்டன, ஹர ஹர மகாதேவி படத்திலேயே இரட்டை அர்த்தமுள்ள வாசனைகள் அதிகம், இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் சொல்லவா வேணும், தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் பிடித்ததா இல்லையா என பார்க்கலாம.
இதுவரை திரைக்கு வந்த தமிழ் படங்களில் இதற்க்கு முன் இவ்வளவு அடல்ட் வசனம் நிறைந்த படங்கள் இருக்கிறதா என பார்த்தால், இருப்பது கடினம் தான், ஏன் என்றால் அவ்வளவு டபுள் மீனிங் வசனம் இருக்கிறது இந்த படத்தை அடல்ட்ஸ் மட்டுமே பார்க்கவேண்டிய படமாகத்தான் இருக்கிறது, இயக்குனர் சந்தோஸ் இதற்க்கு முன் எடுத்த படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனத்தில் புலி என நிரூபித்தார் இந்த படத்தில் மட்டும் சொல்லவா வேணும் பின்னிட்டாரூ இரட்டை அர்த்த வசனத்தில்.
படத்தில் அடல்ட் வசனத்தால் ரசிகர்கள் யாரும் முகம் சுளிக்காத அளவிற்கு சிறப்பாக எடுத்துள்ளார், படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு ப்ளே பாய், இவருக்கு திருமணம் செய்துகொள்ள பெண்ணே கிடைக்காது , ஒரு கால கட்டத்தில் தான் இவருக்கு பெண் கிடைக்கிறது, ஆனால் அவர் ஒரு வாரம் டேட்டிங் வரவேணும் என கண்டிஷன் போடுகிறார் கௌதம்மும் சம்மதம் சொல்கிறார். அதனால் கௌதம் தனது நண்பருடன் செல்கிறார் அங்கு ஒரு வீட்டில் பலான பேயிடம் மாட்டிகொகிறார்கள் இந்த பேய் இவர்களை பாடா படுத்தி வைக்கிறது,பேய்யை விரட்டுவதற்காக நடிகர் மொட்டை ராஜேந்திரன் வருகிறார், இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிகிறது.
படத்தில் பேய பார்த்த பயமே வராது போல, இவர்கள் பேய்க்கு கூட பயப்பிடாமல் செய்யும் சேட்டைகள் இரட்டை வாசனைகள் ரசிக்க வைக்கிறது, மேலும் , என்னாதான் படத்தில் காமெடி இருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு கொஞ்சலும் சலுப்பு வரும் அதற்க்கு காரணம் பேய் பாடம் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதால் தான்.
படத்தில் பாடல்கள் சொல்லிகொள்ளும் அளவிற்கு இல்லை, முதல் பாதியில் தேவை இல்லாமல் பாடல் இருக்கிறது, ஒரே மாதிரியான பேய் படம்தான் ஆனால் கான்செப்ட் மட்டும் புதிது, என்ன தான் இருந்தாலும் ஹர ஹர மகாதேவியை பீட் பண்ண முடியாது, படத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு மகிழ்ச்சிதான், படத்தை குடும்பத்துடன் பார்க்க வந்துடாதிங்க, அடல்ட்ஸ் மட்டும் பார்க்கலாம்.
இயக்குனர் சந்தோஷ் படத்தை அருமையாக தற்பொழுது நடக்கும் விஷயங்களை காட்சிகளாக மாற்றியுள்ளார். இரட்டை வாசனைகளும், சில காட்சிகளும், படத்தில் இடைவெளி சொல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது, கௌதம்க்கு அடுத்த ஹிட் படம் கூட சொல்லலாம், படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த டபுள் மீனிங் வசனங்கலுக்கு குறைவே இருக்காது,மொட்டை ராஜேந்திரன் வந்த பிறகு படம் கலை கட்டும், படத்தை ரசிக்க வந்த ரசிகர்களை படம் திருப்திபடுத்திவிடும்.
மொத்தத்தில் படத்தை எதிர்ப்பார்த்து போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.
இருட்டு அறையில் முரட்டு குத்து 2.5/5
