Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் எப்படி இருக்கு.? விநியோகஸ்தர்களின் கருத்து
‘ஹர ஹர மஹாதேவஹி’யைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து இந்த திரைப்படத்தில் கௌதம் காத்திக் நடித்துள்ளார் இவருடன் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி 3 ஹீரோயின் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இளசுகளை கவர அடல்ட் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இயக்குனர் சந்தோஷ் இந்த படத்தை பேமிலி , குழந்தைகள் பார்க்க வரவேண்டாம் என வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு ஒரு ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இதை பார்த்த விநியோகஸ்தர்கள் இந்த திரைப்படம் இளைஞர்களுக்காக தான் வந்துள்ளது, மேலும் படத்தில் ஏகப்பட்ட அடல்ட் காமெடி நிறைந்துள்ளதால் கண்டிப்பாக திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என நம்பிக்கை தந்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள், மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ஒரு சில நிமிட காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
