Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு.! அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்
இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் அடல்ட் காமெடி படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர் இயக்கிய ஹர ஹர மகாதேவி, மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் பொதுவாக இதுவரை தமிழில் அடல்ட் காமெடி படங்கள் குறைவு என்பதால் இதுபோல் கதையை தேர்வு செய்து இயக்கி வந்தார் இதன் மூலம் வெற்றியும் கண்டார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சாயிஷாவை வைத்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தை இயக்கினார் தற்போது இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார், இந்த நிலையில் சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மூன்றாவது முறையாக கௌதம் கார்த்திக் உடன் இணைய இருக்கிறார் இந்த படத்திற்கு “தீமை தான் வெல்லும்” என்று டைட்டில் வைத்துள்ளார்கள் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார் உருவாகி வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தில் எந்த ஹீரோயினும் இல்லை என கூறப்பட்டுள்ளது. தீமைதான் வெல்லும் தலைப்பு ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் படலை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
