ஹரஹர மகாதேவகி படத்துக்குப் பிறகு சந்தோஷ் பி ஜெயக்குமார் – கௌதம் கார்த்திக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. படத்தில் யாஷிகா ஆனந்த், வைபவி ஷாண்டில்யா மற்றும் சந்திரிகா ரவி என 3 ஹீரோயின்கள்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், வெளிநாடுகளில் இதுபோன்ற ஜானர்களில் படங்கள் வெளிவருவதுண்டு. அந்தவகையில் இந்த படமும் இங்கு வெளியாகியிருக்கிறது. காமெடி என்ற வகையில் மட்டுமே படத்தைப் பாருங்கள்.

மெசேஜை எதிர்பார்த்து குடும்பத்துடன் வர வேண்டாம் என்று கூறியிருந்தார். படம் வெளியான பின்னர் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருகிறது. படத்துக்கு எதிராக இயக்குநர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

iruttu-araiyil-murattu-kuthu
iruttu-araiyil-murattu-kuthu

இந்த நிலையில் பல சர்ச்சைகளை தாண்டி இந்தத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் ஆகிய நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இதுவரை 10 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதனால் இந்த திரைப்படம் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது.