விஜய்சேதுபதி படத்தை விடவா என்னுடைய படம் கேவலமா இருக்கு.. வெளுத்து விட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போது கலாச்சார சீர்கேடு என ஒரு கூட்டமே இவரது படத்தை எதிர்க்க உள்ளது.

ஆனால் அதையே புரமோஷன் ஆக மாற்றி தங்களுடைய படத்தை பல கோடி வசூல் செய்யும் வகையில் மாற்றி விடுகிறார்கள்.

கடந்த சில வருடங்களில் தியேட்டர்காரர்களுக்கு மிகவும் லாபத்தை கொடுத்த திரைப்படம் என்றால் ஹர ஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை சொல்லலாம்.

iamk-cinemapettai
iamk-cinemapettai

அந்த வகையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து என்ற படம் உருவாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பல சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் அந்த படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, வயது முதிர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறித்தான் படத்தை வெளியிடுகிறோம்.

இது சமுதாய சீர்கேடு என்றால், விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் மனைவி கணவனுக்கு தெரியாமல் கள்ள உறவு வைத்துக் கொள்வது மட்டும் சமுதாய சீர்கேடு இல்லையா என நெத்தியடி கேள்வியை கேட்டுள்ளார்.

இஷ்டம்னா படத்தை பாருங்க, இல்லைனா விட்ருங்க என்பதை போல வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக இவர் பேசியது பலருக்கும் பிடித்துவிட்டதாம்.