தமிழ் படங்கள் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தித்திலும் வெளியாவது வழக்கம். தமிழகம், கேரளா தவிர கர்நாடகாவிலும் தமிழ் படங்கள் நல்ல வசூல் ஈட்டும்.

இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வெடித்துள்ள பிரச்சனையால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் திரையிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

மீறி வெளியிடும் திரையரங்குகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். அதனால் நாளை வெளியாகவுள்ள விக்ரமின் இருமுகன் படத்திற்கு பெரிய வசூல் இழப்பு இருக்கும் என தெரிகிறது