Iru-Mugan

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடந்த வாரம்வரை இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 80 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இதன் வசூல் ரூ. 90 கோடியை எட்டியுள்ளதாம்.