Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னையில் பிரபல திரையரங்கில் பா.ஜ.க வினர் ரகளை.! இரும்புத்திரை படம் நின்றது.?
தமிழ் சினிமாவில் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் இயல்பு நிலை மாறி வருகிறது, தற்பொழுது சில படங்கள் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடிகொண்டிருகிறது.
இன்று விஷாலின் இரும்புத்திரை மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் நடிகையல் திலகம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது, இந்த நிலையில் விஷாலின் இரும்புத்திரை படம் பிரபல தியேட்டர்ரான காசி திரையரங்கில் வெளியாகவில்லை, அங்கு நடைபெற்ற பிரச்சனையால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில திரையரங்கில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் பா.ஜ.க வினர்.
சென்னையில் பல திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரைப்படம் ஓடிக்கொண்டிருகிறது, மேலும் இரும்புத்திரை படத்தில் சில சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், அதாவது தகவல் திருட்டு, ஆதார் கார்ட் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறாகள் பா.ஜ.க தொண்டர்கள், இந்த எதிர்ப்பு வலுவடைந்தால் மெர்சல் திரைப்படம் போல் இந்த படத்திற்கும் பிரீ ப்ரோமோஷன் தான் தாறுமாறாக ஹிட் ஆகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
