Reviews | விமர்சனங்கள்
இரும்புத்திரை திரைவிமர்சனம்.!
பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் இரும்புத்திரை, திரைப்படத்தை விஷாலின் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது, படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார் மேலும் அர்ஜுன் வில்லனாக மிரட்டியுள்ளார்.
படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீண்ட நாளாக படம் எப்பொழுது வெளியாகும் என காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது. என் எனில் படத்தில் விறுவிறுப்பான கதைகளம், சமூக கருத்துகள், டிஜிட்டல் இந்தியாபற்றியும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் படம் அமைந்துள்ளது.
நடிகர் விஷாலுக்கு துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்த தரமான படத்தை மக்களுக்காக கொடுத்துள்ளார் நடிகர் விஷால், படத்தின் கதையானது தற்பொழுது இருக்கும் டிஜிட்டல் இந்தியா பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் அருமையாக தைரியமாக எடுத்து கூறியுள்ளார்கள் படத்தில், படத்தில் விஷால் ஒரு ஆர்மி ட்ரைனிங் ஆபிசர், இவருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வரும், அதுவும் கடன் கொடுப்பவர்களை கண்டாலே பொங்கி எழுந்துவிடுவார்.
ஆனால் காலத்தின் சூழ்நிலை இவரே தனது தங்கையின் திருமணத்திற்கு லோன் கடன் வாங்கும் நிலைமை வருகிறது, ஆனால் இவர் எவ்வளவு முயற்சித்தும் லோன் கிடைக்காததால், புரோக்கர் கொடுக்கும் ஐடியா மூலம் தவறான ஆவணங்களை தயார் செய்து லோன் வாங்குகிறார் விஷால் ஆனால் கதையில் ட்விஸ்ட் என்னவென்றால் லோன் வாங்கிய சில நாட்களிலே, பணம் அனைத்தும் மற்றொரு வங்கி கணக்கிற்கு போகிறது, இதனால் கோவம் அடைந்த விஷால் யார் வங்கி கணக்கிற்கு பணம் போகிறது என தேடுகிறார் அது அர்ஜுன் என தெரிகிறது பிறகு பணத்தை மீட்டாரா, அர்ஜுனை என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை.
படத்தில் சமந்தா சைக்கார்டிஸ்ட் டாக்டராக நடிக்கிறார் விஷாலுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறார், மேலும் விஷாலுக்கு மாமாவாக ரோபோ ஷங்கர் நடித்துள்ளார் தனது காமெடி கவுண்டர் வசனத்தால் கலக்கியுள்ளார் படத்தில், விஷாலுக்கு அப்பாவாக டெல்லி கணேஷ் செண்டிமண்டில் அசத்தியுள்ளார் வெகு நாட்களுக்கு பிறகு, அர்ஜுனை பற்றி சொல்லவே வேணாம் தனது கதாபாத்திரத்தை செதுக்கி வைத்துள்ளார், இது நம்ம இடம் என அர்ஜுன் பூந்து விளையாடியுள்ளார் அதுவும் லிப்ட் காட்சி ரசிகர்களிடம் விசில் பறக்கிறது.
படத்தில் விஷாலை பற்றி சொல்லணும் என்றால் தவறை தட்டி கேட்க்கும் கதாபாத்திரம் அப்படியே பொருந்துகிறது, உணர்ச்சிவசபடுவதும் அவரின் கதாபத்திரத்திர்க்கு கச்சிதமாக இருக்கிறது, அதேபோல் யுவன் பின்னணி இசையில் அனைவரையும் மிரட்டியுள்ளார் மிக அற்புதமாக, ஒளிபதிவு,எடிட்டிங் அனைத்தும் சூப்பர்.
படத்தின் சிறப்பு: விஷாலின் அற்புதமான நடிப்பு, அர்ஜுனின் அசால்ட்டான நடிப்பு, சொல்லவேண்டிய கருத்தை மக்களிடம் தைரியமாக எடுத்து கூறிய விதம், இப்பொழுது உள்ள டெக்கினிக்கல் எப்படி செயல் படுத்துகிறார்கள் மேலும் படத்தின் கதை இந்த சமையத்தில் இப்படி ஒரு கதை தேவைதான்,
இரும்புத்திரை படம் கண்டிப்பாக இப்பொழுது உள்ள மக்கள் அனைவரம் பார்க்கவேண்டிய திரைப்படம், குறிப்பாக ஸ்மார்ட் போன் உலகில் வாழும் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம். நாமது மொபைல் போனை நாம் மட்டும்தான் பார்க்கிறோம் என நினைகிறீர்களா, ஆனால் உண்மை அது இல்லை நாம் உபோயோகபடுத்தும் போனை பல பேர்கள் நோட்டமிடுகிரார்கள் என்பதை சிறப்பாக எடுத்து கூறியுள்ளார்கள்.
மேலும் படத்தில் லாஜிக் மட்டும் கொஞ்சம் மிஸ் ஆகிறது மற்றபடி படம் அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
இரும்புத்திரை : 3.75 / 5
