Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெர்சல் படத்தை போல இரும்புத்திரை படத்திற்கும் கிடைக்க இருக்கும் ப்ரீ ப்ரோமோஷன்.

விஷால் நடிப்பில் இரும்புத்திரை படத்திற்கு மெர்சல் படத்தை போல ப்ரீ ப்ரோமோஷன் கிடைக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷால், சமந்தா முதல்முறையாக இணைந்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் படத்தின் வில்லன் வேடமேற்று இருக்கிறார். ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் தள்ளிப்போனது. பெரிய காத்திருப்பிற்கு பின்னர் இப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நாமக்கலை சேர்ந்த நடராஜன் என்பவர் இரும்புத்திரை படத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தடைக்கு மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பொதுமக்கள் நலத்திற்காக ஆதார் அட்டைகள் கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து, தவறான தகவல்கள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. இரும்புத்திரை ரிலீஸானால், மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சம் ஏற்படும். எனவே அந்த காட்சியை நீக்காமல் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது எனக் கோரி இருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை குழு அனுமதித்த படத்திற்கு நாங்கள் தடை தர முடியாது என தள்ளுபடி செய்தது. இதனால், படம் வெளியாகும் முன்னரே ஒரு பிரச்சனை தயாராகி விட்டது.

இதேப்போல, விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். அப்படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி குறித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதிலும், கிளைமாக்ஸ் காட்சி முழுவதும் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து விஜய் பேசி இருப்பார். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. ஒருதரப்பினர் படத்திற்கு தடை விதியுங்கள். காட்சிகளை நீக்குங்கள் என தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால், சினிமா உலகமே மெர்சலுக்கு ஆதரவு கொடுத்தது. இந்த பிரச்சனையால் படத்திற்கு தேசிய அளவில் ஹிட் அடித்தது. மொழி தெரியாவதவர்கள் கூட படத்தில் என்ன இருக்கு என பார்க்கவே படத்திற்கு சென்றனர். வசூலும் அமோகமாக அமைந்தது.

தற்போது, இதே லக் விஷாலுக்கும் அடித்து இருக்கிறது. எதிர்ப்பு இருக்கிறது என்றால் கண்டிப்பாக படத்திற்கு ஆதரவும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top