மித்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு இடையே வெளிவந்த திரைப்படம் தான் இரும்புத்திரை, என்னதான் படத்தில் நமக்கு பிடித்த நடிகர்கள் நடித்தாலும், கதை பிடித்திருந்தால் மட்டுமே படம் அனைவராலும் பாராட்டப்படும்.

irumbuthirai vishal

இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் இந்தியாவால் என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறோம் என்றும், ஸ்மாரட் போனால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்றும் அருமையாக இயக்குனர் மித்திரன் படத்தில் காண்பித்துள்ளார். பல ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனத்தை பெற்று வருகிறது இரும்புத்திரை திரைப்படம்.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது, இரும்புத்திரை திரைப்படமானது சென்னையில் மட்டும் முதல் நாள் 38 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது படத்தின் கதை நன்றாக அமைந்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.