Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாவது நாள் முடிவில் வசூலில் பட்டைய கிளப்பிய இரும்புத்திரை.! வசூல் விவரம் இதோ.!
மித்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஓரிரு தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் தான் இரும்புத்திரை, இந்த திரைப்படம் சில இடங்களில் சர்ச்சையை சந்தித்தது, ஆதார், டேட்டா திருட்டு இவற்றை வைத்து பாஜகா போராட்டத்தை நடத்தினார்கள் அதனால் சில திரையரங்கில் முதல் ஷோ ஒளிபரப்ப முடியாமல் போனது.
படத்தில் மக்களுக்கு ஏற்ற கருத்துகள் இருப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது, இந்த படத்தில் நடித்ததன் மூலம் விஷாலுக்கு அனைவரிடமும் நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது இந்த நிலையில் விஷாலின் இரும்புத்திரை இரண்டாவது நாள் முடிவில் 5.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை திரைப்படம் விஷாலின் திரைபயனத்தில் மிகப்பெரிய ஒப்பனிங் படமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது மேலும் நேற்று விடுமுறை என்பதால் எப்படியும் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்கபடுகிறது.
