துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தில் சமந்தா, அர்ஜுன் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.இசை யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். இப்பொழுது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்துள்ளார்

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது.

விரைவில் சிங்கள் ட்ராக் வெளியாகும். இப்படம் பொங்கல் ரிலீஸ் ஆகிறது.