இறுதிச்சுற்று திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் காட்சி மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இப்படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதனால், படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது, விரைவில் மைக் டைசன் இப்படத்தை பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.