iru_muganவிக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் சுரங்கம் போன்று போடப்பட்டுள்ள செட் ஒன்றில் அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் உள்பட யாருக்குமே செல்போன் உபயோகிக்க அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்காக மொத்தம் நான்கு பிரமாண்டமான செட்டுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒரு செட்டில் விக்ரம்-நயன்தாரா டூயட் பாடலும், மீதியுள்ள மூன்று செட்டுக்களில் விக்ரம் மோதும் ஆக்சன் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாம்.

‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது