இரண்டாவது முறையாக 100 கோடி கிளப்பில் இணையும் விக்ரம் ? இருமுகன் 5 நாள் வசூல் இதோ!

விக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக போராடி வந்தார். சமீபத்தில் வந்த இருமுகன் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை, விக்ரம் என்ற ஒரு தனி நபரால் படம் வசூலை வாரி குவிக்கின்றது.

இருமுகன் முதல் வார முடிவில் ரூ 51 கோடி வசூல் செய்ய, வார நாளான நேற்றும் செம்ம வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் 5 நாட்களில் இப்படம் ரூ 60 கோடி வசூல் செய்துவிட்டதாம், மேலும், இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் மேலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

இதன் மூலம் விக்ரம் இரண்டாவது முறையாக ரூ 100 கோடி கிளப்பில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: