புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆரம்பத்தில் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சிறிய நேரம் வருவது போல் தான் உருவாக்கப்பட்டது. அதற்காக அவரை 8 நாட்கள் மட்டும் கால்ஷீட் வந்தால் போதும் என வெற்றிமாறன் சொன்னதால், அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தற்போது இன்னும் 30 நாட்கள் தேவைப்படுமாறு ஆகிவிட்டது. வெற்றிமாறன் விடுதலை படத்தில் திருப்தியடையாமல் இருப்பதால், இன்னும் எவ்வளவு நாள் கால்ஷீட் கொடுக்க முடியும் என கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

‘நீங்கள் பல வருடங்களாக படத்தை இழுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். நான் ரொம்ப பிஸி’ என மறுபடியும் 30 நாள் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறனிடம் விஜய் சேதுபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் திடீரென்று விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளி விடலாம் என்ற யோசனையில் கதையில் ஒரு சில மாற்றத்தைக் கொண்டு வருவதால், விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் கேரக்டரில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கூடுதல் நாட்கள் தேவைப்படும் என வெற்றிமாறன் விஜய் சேதுபதியிடம் கேட்பதால், 30 நாட்களுக்கு டபுள் சம்பளம் கொடுக்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார். இதனால் படத்தின் பட்ஜெட்டும் எகிறுகிறது.

விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பல பட வாய்ப்புகள் தமிழ் உட்பட பிற மொழிகளிலும் குவிவதால், அவரது நிலைமையை புரிந்து கொள்ளாமல் வெற்றிமாறன் இப்படியெல்லாம் செய்வதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

Trending News