India | இந்தியா
நடிகர் இர்பான் கானை சாகடித்த கட்டி.. அதனால் வந்த விளைவுகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மை
ஹாலிவுட் அளவில் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர் இர்பான் கான்(irrfan khan) கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி காலமானார். இர்பான் கானுக்கு பெருங்குடலில் நியூரோ எண்டோகிரைன் கட்டியிருப்பது கண்டறிந்து கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இருந்தாலும் சிகிச்சை பலனின்றி காலமானார். பெருங்குடல் அழற்சி என தமிழில் அழைக்கப்படும் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். இந்த அழற்சி வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் போன்றவற்றினால் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மோசமான நீர், அசுத்தமான உணவுகளை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது. ஒருவர் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வதால் சமநிலையில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து இத்தகைய நோயை உருவாக்குகிறது.
இது முக்கியமாக செரிமான மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நோயின் தீவிரத்தை அதிகப் படுத்துகிறது. இதனால் பெரும் உடலின் ஒரு பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து பெருங்குடல் அழற்சி ஏற்படுகிறது.
இதனால் பெருங்குடலில் வலி ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கை உண்டாக்கி நோயின் தன்மையை உணர செய்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான பாக்டீரியாக்கள் மாட்டு பாலில் உள்ள புரதத்தினால் பரவுகிறது.
இந்த நோயை கட்டுப்படுத்த வைட்டமின் டி மற்றும் கால்சியம், இரும்புச்சத்து உள்ள உணவு பொருட்களை உட்கொள்வது ஓரளவு கட்டுப்படுத்தும். இருந்தாலும் இதன் அடிப்படையில்தான் ஆண்டிபயோடிக் மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
