இதனை செய்தால் நட்டு நீ டாப்பாக வருவாய்- அனுபவத்தில் இர்பான் பதான் கொடுத்த அறிவுரை

நெட் பௌலர் டு மூன்று வித பார்மட்டிலும் அறிமுகமான வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுவிட்டார். முதல் வெற்றி கிடைத்த பின், அதனை தக்க வைக்க முன்பை விட அதிக உழைப்பு தேவை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.
இந்நிலையில் இர்பான் பதான் நடராஜன் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அவர் சொல்லியது அனைத்தும் நல்ல கருத்துக்கள் தான். எதிர்காலம் குறித்து நட்டு எப்படி திட்டமிட வேண்டும் என பேசியுள்ளார். கட்டாயம் நடராஜன் இவர் கொடுத்துள்ள டிப்ஸை கடை பிடிக்க வேண்டும்.

‘இடதுகை பந்து வீச்சாளர்கள் என்றுமே டீமுக்கு பிளஸ், அவர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும்.  நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க நிறைய செய்ய வேண்டும், அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை பற்றி கவனம் கொள்ள வேண்டும். ஒரு நல்ல விஷயம் அசத்தலான ஆக்ஷன் அவருடையது. எனினும் அவர் பந்து வீசும் போது, தன் உடலை பந்திற்கு பின்னால் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் பந்தை பேட்ஸ்மேனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியும்.

அவரது முதல் டார்கெட் அடுத்த 7,8 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும், அதற்காக அவர் தனது உடற்தகுதி மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். தன்னிடம் உள்ள திறமைகளை வைத்துக்கொண்டே, போட்டிகளில் ஆடும் பொழுது புதிய விஷயங்களை பொறுமையாக கற்க வேண்டும்.இதற்கு டீம் நிர்வாகம் அவருடன் இணைந்து செயல்பட்டு அவரது திறனை மேம்படுத்த வேண்டும்.’ என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

t natarajan

இந்திய டீம்மை பொறுத்தவரை மூன்று வித பார்மட்டிலும் ஜாகீர் கான், இர்பான் பதானுக்கு பிறகு சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்கவில்லை. இர்பான் பதானை பௌலிங் ஆல் ரௌண்டார் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு தான் பௌலர் பதானை இழந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனக்கு நேர்ந்தது போன்ற காயம், அழுத்தம் நடராஜனுக்கு வந்துவிட கூடாது என தந்து அனுபவத்தில் நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இர்பான்.