வீடு வாங்க டிப்ஸ் கேட்ட பண்ட்? பங்கமாய் கலாய்த்த பதான்! வைரலாகுது ட்வீட்

ரிஷப் பண்ட் – இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை ஆச்சர்யமாக பார்க்கும் ஒரு வீரர். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர். 23 வயது தான் ஆகிறது.

ஆரம்பத்தில் டி 20 ஸ்பெஷலிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட வீரர், எனினும் இன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் . சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக மாறிவிட்டார். விக்கெட் கீப்பிங்கில் சற்றே முன்னேற்றம் காமிக்க வேண்டும் இவர். எனினும் முழு பேட்ஸ்மேனாக டீம்மில் ஆடும் அளவுக்கு உள்ளது இவரது பேட்டிங் திறன்.

மனிதர் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டார், “ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததில் இருந்தே எங்கள் வீ ட்டு நபர்கள், புதிய வீடு வாங்கும் நேரம் இது என கேட்டு வருகின்றனர், குர்கான் சரியாக இருக்குமா? அல்லது டெல்லியில் வேறு இடம் இருக்கும் பட்சத்தில் சொல்லுங்க.” என்பதே அது.

பலரும் இவருக்கு வாழ்த்தை கூற, சிலர் இவருக்கு டிப்ஸ் கொடுக்க, வேறு சிலரோ கலாய்க்கவும் செய்தனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “ஏன் நீங்க கிரிக்கெட் மைதானம் வாங்கக்கூடாது.” என கிண்டலாய் பதில் தட்டினார்.

tweet pant pathan

உடனே இந்த ட்வீட் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றது, பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.